Skip to main content

Posts

Showing posts from March, 2015

அழகே.. நீதான் அந்த தேவதையா..

வெள்ளைத் திரை மூடி விண்வெளியில் பறப்பதாய்.. தேவதைகளை நினைத்திருந்தேன் நான்.. கள்ளமில்லா மனம் கொண்டு.. கால் பதிப்பாயென தரணியில்.. கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை… வண்ணத் தூரிகைகளில் வரும் அழகினை விட.. எண்ணக் கற்பனைகளில் உன்னுருவம் அழகாய் எழுகின்றதே.. அழகே.. நீதான் அந்த தேவதையா..? ஓவியங்கள் கொண்ட அழகு.. பாதி கூட இல்லை.. உன்னில் மொய்த்திருக்கும் மொத்த அழகுமே… வற்றாத கடல் நீராய்… உன் வதனம் எங்கும் தவழுமே. அழகாய்.. உன்னைத் தொட்டுவிடத்துடித்து தவிப்பாய்.. தினம் நட்சத்திரங்கள் விழுகின்றன பூமியில்.. உன் வதன தரிசனம் காண.. அழகில் நீ மேலானவள் என்பதால்.. துளித்துளியாய் தேன் சேர்த்து காத்திருக்கின்றன மலர்கள்.. வண்ணத்துப் பூச்சிகளோ.. உன்னில் மொய்க்க முடியா ஆதங்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும்.. சிலந்தி வலைக்குள் தானாகச் சிக்கி… பெய்யும் மழைத் துளிகள் கண்டு நீ… குடை பிடிக்காதே… உன்னில் தெறித்து மோட்சம் காண.. மேகம் தூதனுப்புகின்றது துளித்துளியாய்.. வானவில்லையும் விட அழகானவள் நீ என்பதால்.. சில கணமேனும் நீ முகம் பார்க்கும் கண்ணாடியாய்

இனியும் கொள்ளாதே

பாவையே... என் நெஞ்சுக்கு நெருக்கமாக வந்து... சில நேரங்களில் ஆறுதல் சொல்கிறாய்... விழிகளை விட்டு விலகி நிற்கும்... இமைகளை போல... பல நேரங்களில் விலகியே நிற்கிறாய்... என்னை நேசிகிறாயா வெறுக்கிறாயா... தெரியாமலே பல நேரங்களில் கேள்விகள் எனக்குள்ளே... நீ உரிமையோடு பேசும் போது... என்னை மறக்கிறேன்... நீ விலகி நிற்கும் போது என்னையே வெறுக்கிறேன்.. காரணம் சொல்லாமல் மௌனம் கொள்ளாதடி... உன் விநாடி மௌனம் கூட என் மரணமடி... வினாடிக்கு விநாடி... என்னுயிரே மௌனம் கலைத்துவிடடி... இனியும் கொள்ளாதே மௌனம் நீ.....

காதல் கவிதை

கண்ணுக்குள் என் கண்ணுக்குள் உன் இதயத்தை சிறை வைத்துவிட்டேன்! வேண்டுமானால் என் இதயத்தை எடுத்துக்கொள்! நீ வாழ உனக்கு அது போதும்! உன் இதயம் எனக்கு சொந்தமானது! கேட்காதே! திருப்பித் தரமாட்டேன்!

kadhal

நீ விட்டு சென்ற நினைவுகளை என் வீட்டு ரோஜா செயிடிடம் தினம் பகிந்துக்கொண்டேன்  பூக்களுக்கும் ஆசைப் பிறந்தது உனை காண தினம் பூக்கவேண்டும் என்று.  இப்போது தினம் என் சோலையில் பூக்கள் …

சுடச்சுட உணவு இருந்தால், தாத்தா அதிகம் சாப்பிடுவார் !! அம்மா உணவு பரிமாறினால் அப்பா அதிகம் சாப்பிடுவார் !! தூக்கி வைத்துக்கொண்டு உணவு ஊட்டினால் தங்கை அதிகம் உண்ணுவாள் !! தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால் தம்பி அதிகம் சாப்பிடுவான் !! சமைத்தது மீதமானால் மட்டுமே அம்மா அதிகம் சாப்பிடுவாள!! உண்மைதானே??

அன்பின் காதல் கோயிலே காலமெல்லாம் காத்திருந்து உன்னை நான் தேர்ந்தெடுத்தேன் ஆனால் இன்று கடல் பிரித்து விட்டதே உன்னை நினைக்கையில் என் கண்கள் கண்ணீராகப் பெருகுகிறதே உள்ளம் எல்லாம் உருகுதே உன்தன் அன்பிற்காகத் துடிக்குதே என்றுதான் உன் அன்பு முகம் காண்பேனோ அன்றுதான் ஆறுதல் காண்பேன் என்றுதான் உன் அன்பு முகம் காட்டி எனக்கு புத்துயிர் கொடுப்பாயோ?

நீ அருகில் இல்லாது போனாய் நிஜமெல்லாம் நிழலானது... உந்தன் நிழலில் எந்தன் மூச்சு நிறைஞ்சது... இன்றோ எந்தன் மூச்சில் பல சலனங்கள் ! நீ அலைபேசியில் பேசும் போது எண்ணுவதெல்லாம் உன் உதட்டால் முத்தங்கள் வேண்டும் என்று... காதலர்கள் தூரத்தில் இருப்பதோ நியதி என்னவோ தெரியவில்லை !! நீயும் நானும் தூரங்களை பகிர்வதில்லை நெருக்கங்களே ஒலியாலும் விழியாலும் பகிர்கிறோம் என்பது நியதியை வென்று விடுகிறது.... எம் காதல் !! நீ தேவதை இல்லை என் உசுரின் அணுக்களில் நிறைந்த உயிரானவள் ! உன் அகத்தில் கள்ளமில்லா மென்மையான் காதல் கொள்கிறாய் ! உன் நுதல் காண தினம் தவிக்கும் - நீ இத்தரணியில் தருவித்த தலை மகன் நான் ! உன்னை நிறைவாக நேசிக்கிறேன் சினேகிதியே ! என் உயிரான தாயே !!

காதலுக்காக நீயும் இல்லை உன்னை காதலிக்காமல் நானும் இல்லை ஏனோ மறுக்கிறது என் மனம் இது வேண்டாம் என்று தினம் தினம் பார்வையால் பரிசளித்தது உன் கண்கள் புன்னகையை மறுத்ததில்லை உன் உதடுகள் நீ பேச காத்திருக்கிறேன் கட்டாயம் முடியாது, நான் என் மௌனத்தை முறிக்கும் வரை

பெண்ணே ! நீ அழகென்றூ நான் சொல்லவில்லை.... உன்னை விட யாரும் அழகு இல்லை என்றூதான் சொன்னேன்! எப்படி சொல்வேன்! எனக்குள் கலந்து என்னுள் புதைந்து என்னை எனக்கே அறிமுகப்படுத்து கிறாய்... அன்புக்குரியவளே....!!!!

lovely உன் இதயச் சிறையில் என்னை ஆயுள் கைதியாக்கு உணவாய் உனது காதலை மட்டும் கொடு உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் வேலையையும் சேர்த்தே கொடு. அதை இரட்டை ஆயுள் தண்டனையாக்க நானே கடவுளிடம் மனுக் கொடுக்கிறேன்.

இலக்கியம் பல படித்து இரவு பல வழித்து கவிதை பல படைக்கிறேன்…ஆனாலும் தொலைபேசியில் நீ சொல்லும் .ம்.. என்பதற்கு ஈடான கவிதை என்னிடம் இல்லை. இனிக்க இனிக்க உன் நினைவுகளை குடித்துக் கொண்டே இருப்பதால்… சர்க்கரை வியாதி வந்துவிடுமோ என்ற பயம் எனக்கு. இரண்டு வரி கவிதை சொன்னால் நான்கு முறை வெட்கப் படுகிறாய் ஆக மொத்தம் எனக்கு ஆறு வரி கவிதை.

கொஞ்சம் இரு,, அங்கே சலனம் இல்லாமல் ஏதேதோ சத்தம் கேட்கும்..!! அங்கே முதலிலிருந்து முடிவு வரை எல்லாம் உனக்குத் தெரியுமென எனக்கும் தெரியும்..!! ஏமாற்ற நினைக்காதே, அங்கு வேண்டுமென்றே ஏமாற நான் தயார்…!! அங்கு சரியாக இருக்கத் தேவையில்லை, தவறாக இருத்தலே போதும்..!! சண்டை தொடரலாமே.. அங்கே சமாதானமாகி யாருக்கு என்ன லாபம்..?? அங்கே பாரபட்சம் எதற்கு..? எல்லாமே பறிகொடுத்த பின் என்ன மிச்சம் இருக்கும்..!! அங்கே முதலில் தேடுவோம், எல்லாம் முடிந்தபின் அப்புறம் வேண்டுமெனில் தொலைத்து விடலாம்…!! இருளில் தான் வாழ்க்கை, அங்கே வெளிச்சம் விரட்ட பழகிக் கொள்வோம்..!!!