Skip to main content

Posts

Showing posts from November, 2018

இழப்பு

இழக்கும் வரை பெரிதாக தெரிவதில்லை..!! இழந்த பின் அதை விட பெரிதாக ஒன்றும் இல்லை..!!

உலகத்தின் உண்மை

யாரை நீ உலகமாக நினைக்கிறாயோ.. அவர்களுக்கு நீ நகரமாக தெரிவாய்...!!!

என் காதல்

பார்த்து பார்த்து நடந்தாலும் உன்னை கடந்து செல்லும் போது உன்னுள் விழுந்து விடுகிறது என் காதல்......

ஆண்களின் உழைப்பு

தன் குடும்பம் 👨‍👩‍👧‍👦 வெளிச்சத்தில் வாழவேண்டும் என்பதற்காக தன் மீது தீ ஏற்றி உருகும் மெழுகுவர்த்திதான் ஆ ண்கள்

வலியுடன் வாழ்கை

வலியுடனே வாழ்ந்து பழகிவிட்டேன் புதிதாக யாரும் ஆறுதல் தருவதாக கூறி மறுபடியும் என்னை அனாதை ஆக்கிடாதீர்கள்..!!!

நிலவு

யாருக்கோ ரசிக்க தெரியவில்லை என்பதற்காக !! நிலவு அதன் அழகை இழந்து விடுவதில்லை ...

அம்மா

வெறுக்க தெரியாத முகமும் வெறுப்பு காட்டாத முகமும் அம்மா முகம் மட்டுமே....!!!!

விதி

நமக்கு உரிமையானது நம் இதயத்தில் இருப்பதில்லை... நம் இதயத்தில் இருப்பது நமக்கு உரிமை ஆவது இல்லை...!

அழகியே

உறக்கத்தில்   கனவிலும்... விடிந்தவுடன்    நினைவிலும்.. வாழும் வரை   உயிரிலும் வருவது நீ மட்டுமே...

நீ இல்லாத தனிமை

இல்லவே இல்லை என்று உதடுகள் சொன்னாலும்... வலிக்க தான் செய்கிறது அருகில் நீ இல்லாத தனிமையும் இந்த வெறுமையும்....

காதலில் துளிக்காமம்

உன்னுடனான பெருங்காதலிலும் துளிக்காமம் கலந்தே இருக்கிறது அத்துளி காமத்திலும் பெருங்காதல் நிறைந்தே இருக்கிறது!

என்னவளே

அவள் விழி பார்வையால் என் வார்த்தை வரிகளெல்லாம் கவிதை ஆகிவிடுமே.!

வாழ்கை

வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை தான் ஆனால் நீ நினைப்பது போல் மாற்றி அமைக்க கூடியது..!!!

உறவுகள்

பூவின் மேல் அமர்ந்து பனித்துளியை உடைத்த வண்ணத்துப் பூ ச்சி.. எப்படி அழகாக முடியும்... சில உறவுகளும் இப்படி தான்... பல வண்ணங்களில் வருவார்கள்...!!

சறுகு

சறுகாகி நிற்கின்றேன்... மிதித்து விட்டாவது .. போ...💕

நேசம்

நேசிக்கும் நூறு பேரை நேசிக்க         துவங்கினாலே வெறுக்கும் நான்கு பேரை பற்றி யோசிக்க நேரமிருக்காது...

குழந்தையின் அன்பு

நீங்கள் யாரையாவது தலையில் தூக்கி வைத்து கொண்டாட நினைத்தால் அது குழந்தையாக மட்டுமே இருகட்டும். பாரமும் இருக்காது துரோகமும் இருக்காது..😍😍😍

உண்மையான அன்பு

அருகில் இருந்து தொல்லையாக இருப்பதை விட..!!! தொலைவில் இருந்து அவர்களின் நினைவிலாவது வாழ்ந்து விடலாம்..!!! அன்பு உண்மையாக இருந்தால்.....